திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-21 06:01 GMT

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள், செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்