ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளை திமுக அரசு முறியடிக்கும் - வைகோ

ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளை திமுக அரசு முறியடிக்கும். என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Update: 2023-06-14 04:31 GMT

சென்னை,

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் பாஜக அரசு இறங்கியுள்ளது.

எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளை திமுக அரசு முறியடிக்கும். என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்