மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.;
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழ்நாட்டு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது. இதுதான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ?.
எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.