மதம் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி
தருமபுரம் ஆதீனத்தை இன்று சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றார்
தருமபுரம் ஆதீனத்துடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். ஆதீனத்தை சந்தித்து அவர் ஆசி பெற்றார்
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது ;
ஆதீனங்கள் விவகாரத்தில் தேவையற்ற தலையீட்டை அரசு தவிர்க்க வேண்டும்.மதம், கோயில் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.யார் தவறு செய்தாலும், அதற்கு இறைவன் தக்க பதிலடி கொடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்