முத்தையாபுரத்தில் தி.மு.க பொதுக்கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
முத்தையாபுரத்தில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் தி.மு.க. சார்பில் அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலகுருசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்
இக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.