மூங்கில்துறைப்பட்டில் தி.மு.க. பொதுக்கூட்டம்

மூங்கில்துறைப்பட்டில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-07-02 00:15 IST

மூங்கில்துறைப்பட்டு,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளரும், வக்கீலுமான அசோக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர்அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நெல்லை சிவா கலந்து கொண்டு கருணாநிதி மூலம் மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டும், தற்போது மு.க.ஸ்டாலின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் பேசினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் பிச்சப்பிள்ளை, ஜோசப், பாருக், செல்வி பாலகிருஷ்ணன், நல்லதம்பி, சுபாஷ், சேகர், ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், கிளைக் கழக செயலாளர்கள் துரைவேலன், கலையரசன், குமார் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்