மின்னல் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தி.மு.க. நிதியுதவி

பாவூர்சத்திரம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

Update: 2022-12-20 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து மீனாட்சிசுந்தரபுரத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், மாவட்ட தி.மு.க. சார்பில் உதவித்தொகையினை சாமிநாதன் மனைவி கற்பகவள்ளியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவன் பாண்டியன், பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்