அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தி.மு.க. நிதி உதவி

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கம்பி வேலி அமைக்க தி.மு.க. நிதி உதவி வழங்கியது.

Update: 2022-05-31 16:40 GMT

பாவூர்சத்திரம்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கம்பி வேலி அமைக்க நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சத்தை மாவட்ட பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜகுமாரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சுபா, கீழப்பாவூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, யூனியன் தலைவி காவேரி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்