போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க.வினர் புகார் மனு

விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் மீது தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.;

Update: 2023-09-16 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேசும்போது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழ்நாடு முதல்-அமைச்சர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்