வாணியம்பாடியில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்

வாணியம்பாடியில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதலில் காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Update: 2022-09-06 18:41 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடியில் தி.மு.க.வினர் கோஷ்டி மோதலில் காயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வாணியம்பாடியில் நடந்த நகராட்சி துணைத் தலைவர் தேர்தலின் போது, தி.மு.க.வினர் இடையே நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இருதரப்பினரும் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கும் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவங்களில் 8 பேர் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆயுதங்களுடன் இருந்த ஒரு தரப்பினரின் காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் போலீசார் முன்னிலையில் தி.மு.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்