மணலூர்பேட்டை அருகே திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மணலூர்பேட்டை அருகே திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-31 18:45 GMT

திருக்கோவிலூர், 

ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.பாரதிதாசன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட துணை செயலாளரும், ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளருமான அண்ணாதுரை கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது குறித்து விளக்கமாக பேசினார். கூட்டத்தில் ஒன்றிய அவை தலைவரும், மாவட்ட ஆவின் துணை தலைவருமான பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜீவ்காந்தி, மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணமூர்த்தி, துளசிங்கம், குபேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் கார்த்திகேயன், ரமேஷ், செல்விரேணு, ஒன்றிய பொருளாளர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்