தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அருளம்பாடியில் தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-04-02 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பூத் முகவர்கள் மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அருளம்பாடியில் நடைபெற்றது. இதற்கு சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார் தலைமை தாங்கினார். மேலிட பார்வையாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான பாலாஜி பூபதி கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், ஒன்றிய நிர்வாகிகள் ஜோசப், சேகர், பாருக், சுபாஷ், நல்லதம்பி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல் ரங்கப்பனூர், ராவுத்தநல்லூர், புதுப்பட்டு, லக்கி நாயக்கன்பட்டி, மூங்கில்துறைப்பட்டு, வடபொன்பரப்பி, வடக்கீரனூர், மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்