தி.மு.க. தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது

Update: 2024-03-19 16:41 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன

இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பற்றி கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது. தி.மு.க. எம்.பி., கனிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மாநிலம் முழுவதும் மக்களை நேரில் சந்தித்து, கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் நாளை காலை வெளியிடப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்