தி.மு.க. நிர்வாகிகளுக்கு திராவிட வரலாறு இயக்க பயிற்சி பட்டறை; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
திருச்செந்தூரில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு திராவிட வரலாறு இயக்க பயிற்சி பட்டறையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு, திருச்செந்தூர் தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் திராவிட வரலாறு இயக்க பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பயிற்சி பாசறையை தொடங்கி வைத்தார்.
விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் கட்சி நிர்வாகிகளுக்கு திராவிட இயக்க வரலாற்றினை விளக்கமாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.