மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2022-05-28 03:03 GMT


கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில், சென்னை , அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறுகிறது.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா குறித்தும்,உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்