16-ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-12 16:18 GMT

கோப்புப்படம் 

சென்னை,

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 16-08-2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்