தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-24 17:58 GMT

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்தை தடுக்க தவறியதாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் புதுக்கோட்டையில் திலகர் திடலில் மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாநில துணை செயலாளர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முத்துராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் செந்தில், நகராட்சி தலைவர் திலகவதி, மகளிர் அணி அமைப்பாளர்கள் கமலா செல்வம் (வடக்கு), தேவி (தெற்கு) உள்பட மகளிர் தொண்டர் அணியினர் மற்றும் நிர்வாகிகள், தி.மு.க.வை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்