தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-24 18:45 GMT

மணிப்பூரில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜ.க. அரசினை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட மகளிரணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மகளிரணி மாநில துணை செயலாளர், முன்னாள் எம்.பி. பவானிராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

பா.ஜ.க. அரசை கண்டித்து

மாவட்ட மகளிரணி அமைப்பாளர் தமிழ்செல்விபோஸ், துணை அமைப்பாளர்கள் கவிதா கதிரேசன், கலைமதிராஜா, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இன்பா ரகு மற்றும் தி.மு.க. மகளிர் அணியினர், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மணிப்பூர் மாநில சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை தடுக்க தவறிய பா.ஜ.க.அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்