தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசியில் தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்திய சம்பவத்தை கண்டித்தும், பா.ஜ.க. அரசை எதிர்த்தும் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துசெல்வி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன், மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா, வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் விஜயா, மகளிரணி அமைப்பாளர் சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் பேசினர்கள். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட துணை செயலாளர் கனிமொழி, நகரப்பஞ்சாயத்து தலைவர்கள் வேணி, சின்னத்தாய், முன்னாள் நகர்மன்ற தலைவி பானு ஷமீம், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி மற்றும் தென்காசி மாவட்ட தி.மு.க. மகளிர் அணியினர், தொண்டர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.