அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.,;
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்யாணிமாரிமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் ராசப்பன் தீர்த்தப்பன், கண்ணதாசன், அ.தி.மு.க. உறுப்பினர்கள் ரவிக்குமார், முத்துக்குமார், நிஷாந்தி உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த கவுன்சிலர் சாம்பசிவத்திற்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சில கோரிக்கையை வலியுறுத்தி வெளி நடப்பு செய்தனர். பின்னர் மீண்டும் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின் மன்ற பொருட்களை அலுவலக மேலாளர் மயில்வாகணன் வாசித்தார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், பிரேமாவதி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.