தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை

தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-09 12:39 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் . இன்று இரவுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்