நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்- திருநாவுக்கரசர் எம்.பி.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
காங்கிரஸ் வெற்றி
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருநாவுகரசர் எம்.பி. நேற்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ராகுல் காந்தியின் தேசம் தழுவிய இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு பிறகு காங்கிரஸ் பலம் பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது. அதனால் தான் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே வெற்றியை நிரூபித்த கூட்டணியாகும். சட்டசபை தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
மக்கள் அதிருப்தி
10 ஆண்டு கால மோடி ஆட்சி மீதான அதிருப்தியை மக்கள் தேர்தல் நேரத்தில் வெளிக்காட்டுவார்கள். எனவே ராகுல் காந்தி பிரதமராக வருவது உறுதி. பா.ஜனதாவுக்கு எதிராக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் மத்திய அரசு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன், எஸ்.சி. துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார், மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், மாநகர காங்கிரஸ் தலைவர் மிர்ஷாதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், சட்டசபை தொகுதி தலைவர் சேகர், குடந்தை வட்டார காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.