தி.மு.க. தலைவராக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கி.வீரமணி வாழ்த்து

தி.மு.க. தலைவராக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-28 09:09 GMT

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கருணாநிதியின்மறைவிற்குப் பின், தி.மு.க.வின் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்குத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

கருணாநிதி மறைந்த நிலையில், நம் இன எதிரிகள் இது வெற்றிடம் என்று கூறி, ஆட்சியைப் பிடிக்க வகுத்த வியூகங்களை மூன்று தேர்தல்களில் தோற்கடித்து, அடக்கம் - அரவணைப்பு - அர்ப்பணிப்பு மூலம் இந்தியாவிற்கு வழிகாட்டும் அரசியல் கட்சியாக தி.மு.க.வை வழிநடத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகை சூடி வருகிறார்.

நாளும் புதுப்புது சாதனைப் பொன்னேட்டை இணைத்து வருகிறார், தி.மு.க.வின் செயல்மிகு தலைவர். அவர் தலைமையில் தி.மு.க. பீடுநடை போடுகிறது. 'திராவிட மாடல்' ஆட்சியையும், கட்சியையும் பொலிவுடன் நடத்திடுகிறார். அவருக்கு நம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்