மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ேகாஷம் எழுப்பினர்.

Update: 2023-07-24 10:21 GMT

மணிப்பூர் கலவரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ேகாஷம் எழுப்பினர்.

மணிப்பூர் கலவரம்

மணிப்பூரில் கடந்த 80 நாட்களாக கலவரம் நடந்து வருகிறது இந்த கலவரத்தின்போது 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கலவரக்காரர்கள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தி.மு.க. மகளிர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாட்டையே தலைகுனிய வைத்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் அரசை கண்டித்தும் தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கற்பகம் சரவணன் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஏ.நித்யா, வடக்கு மாவட்டத்தை சேர்ந்த லலிதா சண்முகசுந்தரம், கோட்டை வி.லட்சுமி, மணியம்மை தேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான தி.மு.க.மகளிரணியினர் கண்டன ேகாஷங்களை எழுப்பினர்.

நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் விஜயலட்சுமி ரமேஷ், ஜெயராணிரவி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் பச்சையம்மாள்யேசு, செல்வாம்பாள், கஸ்தூரி, சா.தீபலட்சுமி, செல்வ பாரதி சங்கமித்திரை, வேணி, சுனாபேகம் ராஜேஸ்வரி, ஜீவரேகா விஜயராஜ் செல்வி, மீனாகேசவன், ராஜேஸ்வரி கலியமூர்த்தி, ஜெயமணி மூர்த்தி, சென்னம்மாள், வித்யா பிரசன்னா உள்பட பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் கண்டன உரையாற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்