தி.மு.க. அரசைகண்டித்து மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசைகண்டித்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சொத்துவரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி-விளாத்திகுளம்
சொத்துவரி, மின்கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரில் நேற்று முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட துணை செயலாளர் முருகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பாகவும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தட்டார்மடம்
சாத்தான்குளம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தட்டார்மடம் பஜாரில் ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் குமரகுருபரன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலர் ஞானபிரகாசம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலர் திருமணவேல், ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவ பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டேன்லி ஞானபிரகாஷ், ஒன்றிய குழு துணைத்தலைவர் அப்பாத்துரை, மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்துங்கநல்லூர்-புதுக்கோட்டை
செய்துங்கநல்லூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செங்கான், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் துணைத்தலைவருமான லட்சுமண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மெயின் பஜாரில் தூத்துக்குடி கிழக்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகவேல், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் புதுக்கோட்டை ஜாக்சன் துரைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குரும்பூர்-கயத்தாறு
குரும்பூர் பஜாரில் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளரும், இளைஞர் பாசறை இணை செயலாளருமான சின்னத்துரை கலந்து கொண்டார். ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு பழைய பஸ் நிறுத்தத்தில் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செ.செல்வகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், கயத்தாறு நகர செயலாளர் ராமசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் ஒன்றிய அ.தி.மு.க. மற்றும் சார்பு அணிகள் சார்பில் வீரபாண்டியன்பட்டினத்தில் யூனியன் துணைத்தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மகாலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.சுந்தர், நகர செயலாளர்கள் செந்தமிழ்சேகர், காயல் மவுலானா, ரவிச்சந்திரன், நகர துணை செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.