தி.மு.க. நகர செயலாளர் எம்.எஸ். அக்பர்அலி உடல் இறுதி ஊர்வலம்

அன்னவாசலில் தி.மு.க. நகர செயலாளர் எம்.எஸ். அக்பர்அலி உடல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-09-06 18:59 GMT

தி.மு.க. நகர செயலாளர் காலமானார்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் தி.மு.க. நகர செயலாளரும், எம்.எஸ்.ஏ. நிறுவனங்களின் உரிமையாளருமான எம்.எஸ். அக்பர் அலி நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலமானார். இதனையடுத்து அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக அன்னவாசலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

பின்னர் அவரது உடலுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஜோதிமணி எம்.பி., அப்துல்லா எம்.பி., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், ஒன்றிய செயலாளர் சந்திரன், பேக்கரி மணி, பேரூராட்சி உறுப்பினர்கள் பிரபா, முகமதுகவுதர், விஸ்வாநாதன், ஒன்றியகவுன்சிலர் ரவிக்குமார், தொழில் அதிபர்கள் அக்பர்அலி, சையதுஅப்தாஹீர், தென்னரசு, புஸ்பராஜ், ராமதாஸ் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.

அடக்கம்

தொடர்ந்து அவரது உடல் இறுதி ஊர்வலத்திற்கு பின்னர் நேற்று மதியம் அன்னவாசல் பள்ளிவாசல் மையவாடியில் தொழுகைக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது. மேலும் தி.மு.க. அன்னவாசல் நகர செயலாளர் எம்.எஸ்.அக்பர்அலி மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் அக்பர்அலி இறப்பிற்கு அன்னவாசல் வணிகர் சங்கம் சார்பில், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்