தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்

Update: 2022-12-14 18:45 GMT

செங்கோட்டை:

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதையொட்டி, செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நகர தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அவைத்தலைவர் காளி தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, ராஜா, முத்து சரோஜா ரவீந்திரன், பொருளாளர் தில்லை நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், பாஞ்ச் பீர்முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் ஆ.சண்முகராஜா வரவேற்றார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வக்கீல் ஆபத்துக்காத்தான், நசீர் என்ற அகமதுமீரான் மற்றும் வார்டு செயலாளர்கள் பாலு, சேட் என்ற சேக்மதார், இப்ராஹிம், வேல்மணி, கருப்பசாமி, குட்டிராஜ், சலீம், குற்றாலிங்கம் உளபட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்