தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Update: 2022-12-14 18:45 GMT

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

கோவில்பட்டி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார்.

இதையொட்டி கோவில்பட்டி நகர தி.மு.க.செயலாளர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் பயணியர் விடுதி முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி. முருகேசன் தலைமையில் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகரச் செயலாளர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.ஆர்.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு சந்திப்பிலும் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

எட்டயபுரம்

எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் தலைமையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர தி.மு.க செயலாளர் பாரதி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பும் தி.மு.கவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கயத்தாறு

கயத்தாறு பேரூராட்சி அலுவலகம் முன்பு கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ. சின்னபாண்டியன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றதற்கும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்றதற்காகவும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதில் கயத்தாறு பேரூராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமிராஜதுரை, தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கயத்தாறு புதிய பஸ்நிலையத்தில் பேரூர் செயலாளர் சுரேஷ் கண்ணன் தலைமையில் அனைவருக்கும் லட்டு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்