தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2022-12-14 13:00 GMT

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நகர தி.மு.க. சார்பில் செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு, ஆலங்காயம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கார்த்திக் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன், தொண்டரணி துணை அமைப்பாளர் எஸ்.ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்