தி.மு.க. பிரமுகர் தற்கொலையில் பா.ஜனதா நிர்வாகி கைது

காரிமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் தற்கொலையில் பா.ஜனதா நிர்வாகி கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-10-13 19:30 GMT

காரிமங்கலம்:-

காரிமங்கலத்தை அடுத்த பொம்மஅள்ளி பஞ்சாயத்து கொண்டி செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 48). இவர் தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பா.ஜனதா ஒன்றிய தலைவர் ராஜசேகருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் 20-ந் தேதி கோவிந்தசாமியை, ராஜசேகர் தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த கோவிந்தசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே கோவிந்தசாமி மகன் புவனேஷ் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோவிந்தசாமி தற்கொலை வழக்கில் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்