தி.மு.க. பிரமுகர் வீட்டின் மீது தாக்க முயற்சி

நீடாமங்கலம் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டின் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது.

Update: 2023-07-22 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே ஆதனூர் மண்டபம் கிராமத்தில் உள்ள வடுவூர் சாலையில் வசித்து வருபவர் வீரபாஸ்கர் (வயது53). தி.மு.க. பிரமுகரான இவர், சம்பவத்தன்று இரவு முன்னாவல்கோட்டை ஏரியில் இருந்து சாலைப்பணிக்காக மண் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி ஏன் தினமும் இரவு நேரங்களில் இப்படி மண் எடுத்துச்செல்கிறீர்களே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது என லாரி டிரைவரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து வீரபாஸ்கர் வீட்டிற்கு தூங்க சென்றுள்ளார். பின்னர் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த முனியப்பன், விஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள், வீரபாஸ்கர் வீட்டுக்கு முன்பு நின்று திட்டி உள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டின் மீது தாக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து வீரபாஸ்கர் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பான போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பன், விஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்