தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2023-09-22 00:15 IST

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி துணை அமைப்பாளராக மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஆர்.ஆர்.ராஜ் என்கின்ற ராமராஜன் என்பவரை தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலுடன், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா எம்.முருகன் பரிந்துரையின் பெயரில் தி.மு.க. தலைமை நியமனம் செய்து அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து தி.மு.க. மயிலாடுதுறை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளருக்கு மயிலாடுதுறை தி.மு.க. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான செல்வராஜ், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் வெடிபாலமுருகன் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட வர்த்தக அணி தலைவர்,துணைத்தலைவர், துணை அமைப்பாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்