தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்-காதர் முகைதீன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று காதர் முகைதீன் கூறினார்.

Update: 2022-09-18 20:05 GMT

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று காதர் முகைதீன் கூறினார்.

பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி காமராஜர், அண்ணா, கருணாநிதி நடத்திய நல்லாட்சியினுடைய தொடர்ச்சியாக உள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு போராடிய அனைத்து சமுதாய மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். இது இந்த நாட்டினுடைய பாரம்பரியம். ஆனால் இது வடநாட்டில் பின்பற்றப்படுகிறதோ இல்லையோ? தென்னாட்டில் பின்பற்றி வருகிறோம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு என அரசு விளக்கமாக தெரிவித்துள்ளது. இதனை எதிர்க்கட்சி எதிர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளார்கள். ஆனால் ஆளுகின்ற அரசு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத அளவிற்கு இந்த வரி சுமையை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள். கால போக்கில் அது சரியாகிவிடும் என நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும், இந்த விலை உயர்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

நாடாளுமன்ற தேர்தல்

வருகிற நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்த வரை தி.மு.க. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தி.மு.க. அரசு இதுவரை 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுவிட்டன என அவர்களே கூறுகிறார்கள். பொருளாதாரம் சீர் அடைந்தவுடன் மீதம் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என தி.மு.க. அரசு கூறுகிறது. அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்