தி.மு.க. விவசாய அணி கூட்டம்

பாளையங்கோட்டையில் தி.மு.க. விவசாய அணி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-27 20:02 GMT

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாலைராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில், நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்தி கால்வாய்கள், குட்டைகளை தூர்வாரி விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்