தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
கரூர் மாவட்ட தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;
நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாநகராட்சி மேயர் கவிதாகணேசன், மண்டல பொறுப்பாளர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில்...
இதேபோன்று கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வெங்கமேடு மற்றும் லைட்ஹவுஸ் கார்னரில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட அவை தலைவர் திருவிகா தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், புகழூர் நகர கழக செயலாளர் கே.சி.எஸ். விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.