கும்மிடிப்பூண்டி அருகே திராவகம் குடித்து தி.மு.க. நிர்வாகி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே திராவகம் குடித்து தி.மு.க. நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார்.
தி.மு.க. நிர்வாகி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள சேலியம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்த 6-வது வார்டு உறுப்பினர் கணபதி (வயது 28).
அந்த பகுதியில் தி.மு.க. நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 8-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, திராவகத்தை குடித்ததாக கூறப்படுகிறது.
சாவு
இதையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணபதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.