தி.மு.க. நிர்வாகி கைது
கவர்னர் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக, தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கண்டமனூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகர்ராமானுஜம் (வயது 65). கண்டமனூர் ஊராட்சி தி.மு.க. அவைத்தலைவர். இவர், தமிழக சட்டசபையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவப்பொம்மையை எரிக்க உள்ளதாக கண்டமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழகர்ராமானுஜத்தை போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.