தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-14 17:11 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் ரவி என்கிற இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், நகர செயலாளர்கள் அன்பு, முருகையன், மாவட்ட பிரதிநிதி குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான ஆராஞ்சி ஆறுமுகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., ஒன்றிய பொருளாளர் சுப்பராயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நித்யா, ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி லோகநாதன், புஷ்பா சதாசிவம், அண்ணாமலை, ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் காசிவேல், மாவட்ட பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்