தி.மு.க. அரசின் சாதனைவிளக்க பொதுக்கூட்டம்
கோவில்பட்டி, செட்டிக்குறிச்சியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி, செட்டிக்குறிச்சியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சாதனை விளக்க பொதுக்கூட்டம
கோவில்பட்டி லாயல்மில் காலனி சந்திப்பில் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம், ஒன்றிய அவை தலைவர் பொன்னுச்சாமி, துணைச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய பொருளாளர் கண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் பாரதி, மாவட்ட பிரதிநிதி அசோக்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் அழகுராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கல்லிடை கனல் என். பேச்சி, கோவில்பட்டி நகர சபை தலைவரும், நகரச் செயலாளருமான கா. கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராதா கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோழ பெருமாள், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் கணேசன், தாமோதரக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். சுரேஷ் நன்றி கூறினார்.
செட்டிக்குறிச்சி
இதேபோன்று கயத்தாறு மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் செட்டிகுறிச்சியில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய துனை செயலாளர்கள் கிருஷ்ணன், எட்ராஜ், கருமாரியம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணசாமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி செல்வராஜ் வரவேற்று பேசினார். மகளிரணி ஜெ.ஜெசிபொன்ராணி, தலைமை கழக பேச்சாளர் தமிழ்பிரியன் ஆகியோர் சிறப்புறையாற்றினர். கோவில்பட்டி அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், பேரூர் கழக செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட துணை செயலாளர் த.ஏஞ்சலா, இளைஞர் அணி துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய அவைத் தலைவர் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.