தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

சிவகிரியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

Update: 2023-02-27 18:45 GMT

சிவகிரி:

தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சிவகிரியில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளையப்பன் தலைமை தாங்கினார். யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், சீனிவாசன், குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன், பொருளாளர் சரவணன், துணைச் செயலாளர் ராஜதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், பூசைப்பாண்டியன் பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்