தி.மு.க. ஆட்சியில் 1,912 செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.;

Update:2024-05-12 18:24 IST

சென்னை,

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இன்றைக்கு உலக செவிலியர் தினம், செவிலியர்கள் அனைவருக்கும் தமிழக முதல்-அமைச்சரின் சார்பில் செவிலியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவீதத்துக்கு மேலான கோரிக்கைகள் முழுமைப் பெற்றுள்ளது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 1,412 ஒப்பந்தச் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ரூ.16,000 சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ.18,000 சம்பளமாக உயர்த்தப்பட்டது. அதோடு மட்டுமல்லாது ஒப்பந்த செவிலியர்களாக மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல ஆண்டு காலமாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருந்தார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்