தே.மு.தி.கவினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிர்புறமும், ெரயில்வே நிலையம் நுழைவு வாயில் அருகிலும் பயணியர் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சுபப்பிரியா, மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், நகரச் செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள்சாமி, பொன் ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.