வருகிற ஜனவரி 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வருகிற ஜனவரி 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2023-01-19 12:15 GMT

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட ஒவ்வொரு கட்சியும் ஆர்வம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

இந்த நிலையில் வருகிற ஜனவரி 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் உட்கட்சி தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு, பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் ஜனவரி 23 காலை 10 மணிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. உட்கட்சி தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்