தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க. சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தே.மு.தி.க. சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.