தே.மு.தி.க. சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

Update: 2024-03-06 11:04 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், தே.மு.தி.க. சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தே.மு.தி.க.வின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புசெயலாளர் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், அ.தி.மு.க. - தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்