தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்

வள்ளியூரில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-05-21 19:02 GMT

வள்ளியூர்:

நெல்லை புறநகர் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 28-ந்தேதி ஆலங்குளத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளவும், வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் அபிஷேக், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தினகரன், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இசக்கிமுத்து, வள்ளியூர் நகர செயலாளர் முருகராஜா, பணகுடி நகர செயலாளர் ஜான் டேவிட் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்