புத்தாண்டில் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!
விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
ஒவ்வொரு புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களை சந்திப்பது வழக்கம்.
இந்தாண்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் காலை 11 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொண்டர்களை சந்திக்கவுள்ளதாகவும் தொண்டர்கள் விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.