தி.க. இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து தி.க. இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2023-08-22 18:45 GMT


நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து தி.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளர் நாத்திக பொன்முடி தலைமை தாங்கினார். மாநில சட்ட கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இளமாறன் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் தலைமை கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை திணித்து மாணவர்களின் உயிரை பழிவாங்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நாகை நகர தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்