வால்பாறையில் சத்துணவு சாப்பிட்டதால் மயக்கம்: மாணவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

வால்பாறையில் சத்துணவு சாப்பிட்டதால் மயக்கம்: மாணவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

Update: 2023-04-28 18:45 GMT

பொள்ளாச்சி

வால்பாறை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்த கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களின் பெற்றோருக்கும் அவர் ஆறுதல் கூறினார். அப்போது வால்பாறை நகர செயலாளர் சுதாகர், மாவட்ட துணை செயலாளர் பொன்னுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், வால்பாறை நகராட்சி துணைத் தலைவர் செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்