சிதம்பரம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை

சிதம்பரம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது.

Update: 2022-10-06 18:45 GMT


சிதம்பரம் 

சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் கதிரேசன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ஜம்புலிங்கம் செய்ததோடு, சிறப்பு விற்பனை குறித்து கூறுகையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் சிதம்பரம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு புதிய வடிவமைப்புடன் கூடிய புடவைகள், காஞ்சீபுரம், ஆரணி, திருபுவனம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, கைலி, துண்டு ரகங்கள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் போன்றவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் கனவு திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை 10 மாத தவணைகள் மட்டும் பெறப்படுவதோடு, 11, 12 ஆகிய தவணைகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி, பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம் என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்